Tamannaah | "இதுதான் தனது தற்போதைய இலக்கு.." | ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை தமன்னா
சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிப்பதாக நடிகை தமன்னா கூறியுள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் சீரிசில் நடித்த விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் காதல் முறிந்தது. இந்நிலையில், விஜய் வர்மாவுடனான பிரிவிற்குப் பிறகு “ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிப்பதாகவும், அதுதான் தனது தற்போதைய இலக்கு“ எனவும் தமன்னா பாட்டியா கூறியுள்ளார்.
