Tamannaah | Isha | ஈஷா மையத்தில் களைகட்டிய மகா சிவராத்திரி - பக்தி பரவசத்தில் நடனமாடிய தமன்னா

ஈஷா மையத்தில் களைகட்டிய மகா சிவராத்திரி - பக்தி பரவசத்தில் நடனமாடிய தமன்னா

Tamannaah | Isha | ஈஷா மையத்தில் களைகட்டிய மகா சிவராத்திரி - பக்தி பரவசத்தில் நடனமாடிய தமன்னா கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது... சிவராத்திரியையொட்டி, ஆதி​யோகி முன்பு பிர​திஷ்டை செய்​யப்​பட்​ட யோகேஷ்வர லிங்​கத்​துக்கு ஜக்கி வாசுதேவ் மகா அபிஷேகம் செய்தார். தொடர்ந்து தீப்பந்தங்களை சுழற்றியவாறு நடன கலைஞர்கள் பக்தி பரவசத்துடன் நடனமாடியது பக்தர்களை பரவசப்படுத்தியது... சிவராத்திரி விழாவில், தொடர்ந்து விடியவிடிய பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.... விழாவின் சிகரமாக ஜக்கி வாசுதேவ் பக்தி பரவசத்துடன் நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினார்... அப்போது நடிகை தமன்னா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் உற்சாக மிகுதியில் நடனமாடினர். ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தேமுதிக பொதுச் செயலர் பிரமேலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com