சிரஞ்சீவியுடன் நடிக்கிறார் விஜய் சேதுபதி

நடிகர் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
சிரஞ்சீவியுடன் நடிக்கிறார் விஜய் சேதுபதி
Published on
நடிகர் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது மனைவி வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு, அவரது கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com