

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மும்பைக்கு மாற்றக் கோரியும், பீகார் காவல்துறை விசாரணைக்கு தடைகோரியும் நடிகை ரியா சக்கரவர்த்தி தொடர்ந்த வழக்கில், விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகாரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை, மும்பைக்கு மாற்ற இயலாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.