அகிலமே ஆராதிக்க இனிதே ஆரம்பம்" - வாடிவாசல் அப்டேட்

x

இந்த படம் தொடங்குமா தொடங்காதா? ஷூட்டிங் போவாங்களா? போகமாட்டாங்களா, படம் உருவாவுமா இல்லை ரத்து பண்ணிட்டாங்களானு பல கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்புன படம் வாடிவாசல்...

வெற்றிமாறன் இயக்கத்துல சூர்யா நடிப்புல பிரமிக்க வைக்குற அளவுக்கு அறிமுக டீசர் வந்தாலும், அதுக்கப்புறம் ஒரு அப்டேட்டும் வராம இருந்ததால, படம் உருவாகுமானு கேள்வி வந்தது.. கூடவே படம் ரத்தாகிடுச்சினும் வதந்தி பரவுச்சி..

இப்படி போய்ட்டு இருக்க, பொங்கல் அன்னைக்கு அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறதுனு அப்டேட் கொடுத்து ரசிகர்களை கொண்டாட வச்சாரு தயாரிப்பாளர் தாணு..இப்ப படத்தோட பாடல் கம்போசிங் தொடங்கிடுச்சினு வெற்றிமாறன் - ஜிவிபிரகாஷ் சேர்ந்து வேலை செய்யுற போட்டோவை போட்டு அடுத்த அப்டேட்ட கொடுத்துட்டாரு... இனி வாடிவாசல்ல வேலைகள் வேகமெடுக்கும்னு எதிர்பார்க்கலாம்...

அகிலமே ஆராதிக்க இனிதே ஆரம்பம்" - வாடிவாசல் அப்டேட்


Next Story

மேலும் செய்திகள்