Suriya | Radhika | ``சூர்யாவுக்கு நடந்தது நான் நேர்லயே பார்த்திருக்கேன்’’ - போட்டு உடைத்த ராதிகா
``சூர்யாவுக்கு நடந்தது நான் நேர்லயே பார்த்திருக்கேன்’’ - போட்டு உடைத்து அதிர வைத்த ராதிகா
நடிகர் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு ரசிகர்களுக்குத் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், சினிமா உலகில் சூர்யா சந்தித்த மனப்போராட்டங்களையும், அதில் இருந்து அவர் வென்று வந்ததையும் தாம் நேரில் பார்த்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, தமிழ் ரசிகர்களின் பேராதரவு தன்னை நெகிழ வைத்துள்ளதாகத் தெரிவித்தார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இந்த ஆண்டு இறுதிக்குள் சூர்யாவின் அடுத்த படம் உன் வெளியாகும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் , சூர்யாவுக்கு அது ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என்றும் வாழ்த்தி பேசினார்.
