#STR50 - ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு | STR50 | SilambarasanTR
நடிகர் சிம்பு தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பட அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சிம்பு தற்போது தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாகவும் இதில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதாகவும், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் 50 வது படம் குறித்து அப்டேட்
சிலம்பரசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பட அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் சிம்பு தற்போது தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாகவும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தற்சமயம் தக்லைப் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு.
இதனைத்தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தன் 49 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இதன் அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது
.இதையடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
