

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில், அஜித்தின் 60-வது படத்தில் நாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது. அது, வதந்தி என தெரியவந்துள்ள நிலையில், தற்போது, தெலுங்கு படம் ஒன்றில் ஜான்வி நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகனாத், இந்த படத்தை இயக்குகிறார்.