Sridevi | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு இழப்பீடு - தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு நெடுஞ்சாலைத் துறை வழங்கிய இழப்பீடு குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனுவை 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு கடற்கரைச் சாலையை விரிவுபடுத்த கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 420 சதுர அடி நிலத்திற்கு இழப்பீடாக, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் குடும்பத்திற்கு 1 கோடியே 87 ஆயிரத்து 183 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்றும் கூறி, சென்னையைச் சேர்ந்த சிவகாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தமிழக அரசு 4 வாரங்களில் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டார்.
Next Story
