கைதாகும் நடிகர் சோனு சூட்...? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

மோசடி வழக்கில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டை கைது செய்ய பஞ்சாப் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா, மோஹித் சுக்லா என்பவர் மீது, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார். போலி ரிஜிகா நாணயத்தில் முதலீடு செய்ய தன்னை ஈர்த்ததாக கூறினார். இவ்வழக்கில் சோனு சூட்டிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் சாட்சியமளிக்க சோனு சூட் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டபோது ஆஜராக தவறியதால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்