விஜய்,அஜித்துக்கு அடுத்து போலாந்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் திரைக்கு வர தயாராக உள்ள படம் சீமராஜா திரைப்படம் தற்போது போலந்து நாட்டில் வெளியாக உள்ளது.
விஜய்,அஜித்துக்கு அடுத்து போலாந்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்
Published on

சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் திரைக்கு வர தயாராக உள்ள படம் சீமராஜா . இந்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ரஜினிமுருகன் படங்களை இயக்கிய பொன்ராம் 3வது முறையாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்துள்ளார் .சூரி,சிம்ரன்,நெப்போலியன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது.

இந்நிலையில் சீமராஜா திரைப்படம் தற்போது போலந்து நாட்டில் வெளியாக உள்ளது.7th sense cinematics என்ற நிறுவனம் முதல் முறையாக இந்த படத்தை போலந்து நாட்டில் வெளியிட உள்ளது.சிவகார்த்திகேயன் படங்களில் போலந்து நாட்டில் வெளியாகும் முதல் படம் இதுவே.

உச்ச நட்சத்திரங்களான ரஜினி,விஜய்,அஜித்,சூர்யாவிற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் படம் போலந்து நாட்டில் திரையிடப்பட உள்ளது.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com