நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு! | Sivakarthikeyan
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு 'மதராஸி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் தலைப்பு வெளியிடப்பட்ட நிலையில், தமிழில் மதராஸி என்றும், இந்தியில் தில் மதராஸி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வருகிறது, மதராஸி திரைப்படம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து, துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜாம்வால் மற்றும் நடிகர் விக்ராந்த் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் என்ற புதுமுகம் நடிகை அறிமுகமாகிறார்.
Next Story
