அண்ணனுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபு

x

நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் தொடர்பான வழக்கில், பிரபு மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. நடிகர் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த வீட்டில் தனக்கும் பங்கு இருப்பதாக கூறிய நடிகர் பிரபு, அந்த உத்தரவை நீக்க கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசரணைக்கு வந்த நிலையில், 3 கோடி ரூபாய் கடனுக்காக 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளதாக பிரபு தரப்பில் வாதிடப்பட்டது. நீதிபதி தரப்பில் ராம்குமாருக்கு, பிரபு உதவி செய்யலாமே என கேள்வி எழுப்பிய நிலையில், அவருக்கு உதவ முடியாது என்றும் நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளதாகவும் பிரபு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதியன்று வழக்கை தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்