

நடிகர் ரஜினியிடம் கதை கூறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவா ரஜினியின் இல்லத்திற்கு சென்றிருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளி விழாவில் இயக்குநர் சிவா கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் 167வது படத்தை சிவா இயக்க இருப்பது உறுதியாகி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.