Sirakadikka Aaasai | `சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்
`சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்
தொலைக்காட்சி நடிகர் ஜெயமணி மாரடைப்பால் காலமானார் "திருமதி செல்வம்", "சிறகடிக்க ஆசை" உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, பிரபலமான நடிகர் ஜெயமணி மாரடைப்பு காரணமாக 76 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியன் உறுப்பினராக செயல்பட்டு வந்த நடிகர் ஜெயமணி, “திருமதி செல்வம்“ சீரியலில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் இல்லங்களில் பிரபலமானவர்.
