

ஈழத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான "ஒற்றைப் பனைமரம்" என்ற படத்தின் டிரெய்லரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தணிகைவேல் தயாரித்திருக்கும் படம் இந்த படத்தை புதியவன் ராசையா இயக்கியுள்ளார். இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளை சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.