"சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்" - பாடகி ஜானகி வேதனை

தான் இறந்து விட்டதாக சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என பாடகி ஜானகி வேதனை தெரிவித்துள்ளார்.
"சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்" - பாடகி ஜானகி வேதனை
Published on

தான் இறந்து விட்டதாக சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என, பாடகி ஜானகி வேதனை தெரிவித்துள்ளார். நேற்று அவரைப்பற்றிய அவதூறு செய்தி சமூகவலைதளத்தில் வெளியானதை தொடர்ந்து, பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த நிலையில் அவர், நேற்று தனது ரசிகர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், இந்த அவதூறு செய்தியைக்கேட்டு எல்லோரும் தொலைபேசி மூலம் விசாரிப்பதாக கூறியுள்ளார். இதுபோன்ற செய்தி 6-வது முறையாக வருவதாக கூறியுள்ள ஜானிகி, இது மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார். இது போன்ற பொய்யான செய்தியை, வதந்தியை, நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com