"சிலம்பரசன் திருமணம் பற்றிய தகவல்கள் வதந்தியே" - சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர் விளக்கம்

நடிகர் சிலம்பரசனின் திருமணம் பற்றிய தகவல்கள் வதந்தியே என்று அவரது தந்தையும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
"சிலம்பரசன் திருமணம் பற்றிய தகவல்கள் வதந்தியே" - சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர் விளக்கம்
Published on

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், தன்னுடைய மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன என்றும், அப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை என்றும் கூறியுள்ளார். சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்து கொண்டிருப்பதாகவும், பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com