டெலிகிராமில் வெளியான சிக்கந்தர் திரைப்படம்... HD பிரிண்ட் லீக் ஆகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சி...

டெலிகிராமில் வெளியான சிக்கந்தர் திரைப்படம்...   HD பிரிண்ட் லீக் ஆகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சி...
x


சல்மான் கான், ராஷ்மிகா மந்தண்ணா, சத்யராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை திரையரங்குகளில் வெளியானது.

சுமார் 200 பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான சிக்கந்தர் திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் டைரக்ட் செய்திருந்தார்.

கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு சல்மான் கதாநாயகனாக நடித்த படம் வெளியாகி இருப்பதால் சல்லுபாயின் ரசிகர்களிடம் சிக்கந்தர் திரைப்படத்திற்கு பல மடங்கு எதிர்ப்பார்ப்பு எகிறி இருந்தது.


இந்த சூழலில் தான் திரைப்படம் வெளியான மார்ச் 30ம் தேதிக்கு முன்பே சென்ற சனிக்கிழமை அதன் HD பிரிண்ட் இணையத்தில் வெளியாகி பாலிவுட் ஃபிலிம் இன்டஸ்ட்ரியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

2 வருட உழைப்பு... 200 கோடி பட்ஜெட்... 90 நாள் படப்பிடிப்பு... என சிக்கந்தர் படக்குழுவினரின் ஒட்டு மொத்த உழைப்பும் வெறும் ஓரே க்ளிக்கில் டவுன்லோடு செய்யப்பட்டிருப்பது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் Sajid Nadiadwala பல தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியோடு ரீலிஸுக்கு முன்பே இணையத்தில் அப்லோடு செய்யப்பட்டிருந்த சிக்கந்தரின் Pirated Copy-ஐ அகற்றும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார்.

இது வரை ஆயிரத்திற்கு அதிமான வெப்சைட்களில் பதிவிட்டிருந்த சிக்கந்தர் படத்தை தொழில்நுட்ப கலைஞர்கள் நீக்கி இருந்தாலும் ஏற்கனவே, லட்சக்கணக்கான நெட்டிசன்கள் முழு படத்தையும் டவுன்லோடு செய்துவிட்ட காரணத்தால் அதனை டெலிகிராம் மற்றும் Share it போன்ற செயலிகள் மூலம் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நெகடீவ்விட்டியெல்லாம் ஓரம் தள்ளி வைத்துவிட்டு பாலிவுட்டே திரும்பி பார்க்கும் வகையில் அமீர்கானை வைத்தும் படப்புரோமஷன் செய்து பாசிட்டிவ் இமேஜை உருவாக்கினார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

அதுமட்டுமின்றி, தமிழில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள சந்தோஷ் நாராயணன் சிக்கந்தர் திரைபடத்திற்கு இசையமைத்திருப்பதாலும், ஏ.ஆர் முருகதாஸ், சத்யராஜ், ராஷ்மிகா போன்ற தென்னிந்திய பிரபலங்கள் படக்குழுவில் இருப்பதாலும் தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்குமென எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் படப்புரோமஷனுக்காக சல்மான் கான் அளித்திருந்த ஒரு பேட்டியில் தென் இந்தியாவில் சல்மான் கானை புரோஷமனுக்கு அழைப்பார்கள். "பாய்.. பாய் என கோரஸாக கத்துவார்கள். ஆனால் ஒருவர் கூட என்னுடைய படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க மாட்டார்கள் என வேதனையாக தெரிவித்திருந்தார். அதோடு, ரஜினி, சூர்யா, ராம்சரண், சிரஞ்சீவி போன்றவர்களின் படங்கள் பாலிவுட்டில் நல்ல வசூலை குவிப்பதாகவும், அதே நேரம் இந்தி படங்களை தென் இந்தியர்கள் கைவிட்டு விடுவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். சல்மானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து ஏற்கனவே இணையத்தில் விவாத பொருளாக மாறி இருந்தது.

இந்த சூழலில் சென்ற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்திலுள்ள திரையரங்கிலும் படம் வெளியான நிலையில் ரசிகர்களும், திரை விமர்சகர்களும் மிக மோசமான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர்.

குறிப்பாக, கஜினி திரைப்படம் மூலம் பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த ஏ.ஆர்.முருகதாஸிடமிருந்து இப்படியானதொரு மோசமான திரைக்கதையை எதிர்ப்பார்க்கவில்லை என ரசிகர்கள் பலரும் வேதனையோடு பதிவிட்டு வருகின்றனர்.

அதோடு, சல்மான் கானும், இயக்குனர் முருகதாஸும் தொடர்ந்து மோசமான திரைப்படங்களையே எடுத்தால் அவர்களை நம்பி ஆடியென்ஸ் எப்படி திரையரங்குகளுக்கு செல்வார்கள் என்கிற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.

எனினும், விடுமுறை தினங்கள் என்பதாலும், Month End Salary கிரேடிட் செய்யப்பட்டிருப்பதாலும் படம் நிச்சயமாக பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்துவிடுமென திரைத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒருப்புறம் படத்தை இணையத்தில் டவுன்லோடு செய்து பார்ப்பவர்களை திருடர்கள் என படக்குழுவினர், திரைத்துறையினரும் குறிப்பிட்டு வரும் அதே வேளையில், கொஞ்சமும் பொறுப்பின்றி இதுப்போன்ற மோசமான படத்தை எடுத்து அதை ஆடியென்ஸ் தலையில் கட்டுபவர்களும் திருடர்கள் தான் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சல்மான் கான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளையும், பொலிடீக்கல் சர்ச்சைகளையும் தவிர்த்து நல்ல திரைக்கதை கொண்ட படங்களில் நடித்தால் பேன் இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் அவருடைய படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்கிற கருத்தையும் பரவலாக பார்க்க முடிகிறது. 1

சல்லு பாய்யும், இயக்குனர் முருகதாசும் மீண்டும் கம்பேக் கொடுப்பார்களா ? என்பது அவர்களுடைய அடுத்த அடுத்த படைப்புகளில் வெட்டவெளிச்சமாகிவிடும்.


Next Story

மேலும் செய்திகள்