சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் சூட்டப்ட்டுள்ளது. இந்த படத்தில் நாசர் நடிப்பார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களின் முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது.