கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து ஹாலிவுட்டில் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. சமூக விலகல், முக கவசம் மற்றும் கொரோனா தடுப்பு பரிசோதனை என 36 பக்கங்கள் அடங்கிய கடும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை பின்பற்றி, ஹாலிவுட்டில் தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன.