"பான்மசாலாவுல குங்கும பூவா.." Shah Rukh Khanக்கு பறந்தது நோட்டீஸ்

x

பான் மசாலா விளம்பரம் தொடர்பாக நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் நடித்துள்ள விளம்பரத்தில், பான் மசாலாவில், குங்கும‌ப்பூ கலப்பது தொடர்பாக தவறான தகவல்கள் பரப்ப‌ப்படுவதாக ஜெய்ப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஒரு கிலோ குங்கும‌ப்பூவின் விலை 4 லட்சம் ரூபாயாக இருப்பதாகவும், 5 ரூபாய்க்கு விற்கும் பான் மசாலாவில் குங்கும‌ப்பூவின் வாசனையைக்கூட அதில் சேர்க்க முடியாது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால், சாமானிய மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும், மார்ச் 19-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்