Actor Shah Rukh Khan Birthday | பிறந்தநாள் அன்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்

x

பிறந்தநாள் அன்று ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்

பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் நவம்பர் இரண்டாம் தேதி தனது அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இம்முறை அவரை சந்திக்க முடியாமல் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், தமது ரசிகர்களை விடவும் அவர்களை பார்க்க முடியாமல் தாம் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக நடிகர் ஷாருகான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் தனது பிறந்த நாளன்று தனது மன்னத் பங்களாவில் ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் வாழ்த்து பெறுவதை வழக்கமாக கொண்ட ஷாருக்கான், இம்முறை கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என்று அதிகாரிகள் தம்மை கேட்டுக் கொண்டதால் தம்மால் ரசிகர்களை சந்திக்க முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், தமக்காக தமது பங்களாவிற்கு வெளியே காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.


Next Story

மேலும் செய்திகள்