Serial Actress Swetha | "20 வயதில் ஏமாற்றினார்" - பூதாகரமாக வெடிக்கும் சீரியல் நடிகை ஸ்வேதா விவகாரம்

"20 வயதில் ஏமாற்றினார்" - பூதாகரமாக வெடிக்கும் சீரியல் நடிகை ஸ்வேதா விவகாரம்

20 வயதில் திருமணம் செய்து ஏமாற்றினார் - நடிகை ஸ்வேதா குமுறல்

சின்ன மருமகள்' சீரியல் நடிகை ஸ்வேதா, கடந்த சில மாதங்களாகத் தன்னைச் சுற்றி நிலவி வரும் திருமண சர்ச்சைகளுக்குத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி சமீபத்தில், "ஸ்வேதாவின் கணவர் என்று கூறப்படும் ஆதி என்னிடம் நகையும் பணமும் வாங்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், ஆதி என்பவர் ஸ்வேதா தனது மனைவி எனப் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்வேதா, "நாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது உண்மைதான். அப்போது எனக்கு 20 வயது என்பதால் அனுபவமில்லாமல் அவரை நம்பினேன்.

ஆனால், அவர் மீது பல வழக்குகள் இருப்பதும், அவர் ஒரு மோசடி பேர்வழி என்பதும் காலப்போக்கில் தெரியவந்தது.

அவரை நம்பி நகை மற்றும் பணத்தை இழந்தேன். தற்போது அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளேன்," என ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

தன்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வரும் அந்த நபரை நம்பி யாரும் விளம்பர ஒப்பந்தங்களோ அல்லது பணப் பரிவர்த்தனையோ செய்ய வேண்டாம் என அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் அந்த நபரைத் தெரியாது என மறுத்த ஸ்வேதா, தற்போது சட்ட ரீதியான போராட்டத்திற்காகவே அமைதி காத்ததாகக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com