"மன நிம்மதி கிடைக்க இங்கு வருவேன்" நடிகர் செந்தில் அடிக்கடி வரும் கோவில்
சென்னை திருவொற்றியூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நகைச்சுவை நடிகர் செந்தில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, கோவிலுக்கு வந்த செந்திலுடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வருவதால் தமக்கு மன நிம்மதி கிடைப்பதாகவும் அனைவருக்கும் மனநிம்மதி வேண்டும் என்றால் இந்த ஆலயத்திற்கு வந்து செல்லும் படியும் கூறினார். தொடர்ந்து சினிமாவில் தான் நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
