இளையராஜாவை பாராட்டி கவிதை வாசித்த செந்தில் பாலாஜி
கரூரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் கச்சேரியில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு கவிதை வாசித்ததுடன், நீண்ட நேரம் அமர்ந்து கச்சேரியை பார்த்து ரசித்தார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின் கரூருக்கு முதன்முறையாக வந்த செந்தில் பாலாஜி, தனியார் அமைப்பு நடத்திய இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கு வருகை தந்தார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல், காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகளுடன் அமர்ந்து பாடல்களை கேட்டு ரசித்தார். பின்னர் இளையராஜாவிற்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற செந்தில் பாலாஜி, இசைக்கு ஒரு உருவம் இருந்தால் அது இளையராஜா என... அவரை பாராட்டி மேடையிலேயே கவிதை ஒன்றை வாசித்தார்.
Next Story
