

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை போல தான் சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பாடகியும், நடிகையுமான சுசித்ரா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்த அவரின் பதிவில், சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஆங்கிலத்தில் விவரித்துள்ளார். காவலர்கள் பணியிடை மாற்றம் போதாது என்று கூறியுள்ள சுசித்ரா, இந்த வழக்கிற்கு நீதி கிடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்றும், இது குறித்த தகவலை பகிருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.