

"ஜுங்கா" படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. காஷ்மோரா இயக்குநர் கோகுலின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது "ஜுங்கா" . இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சயீஷா நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மடோனா செபஸ்டின், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.