

தமது17 வயதில் நடிக்க வந்த கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே, படப்பிடிப்பின்போது, எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் வெளிநாடு பறப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற சம்யுக்தா ஹெக்டே, வெளிநாட்டு இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமது சமூக வலை தள பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன் என்ற படத்தில் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே, தமிழில் கைவசம் 3 படங்களை வைத்துள்ளார்.