பிறந்தநாள் கொண்டாட சமுத்திரகனி தேர்ந்தெடுத்த சாய்ஸ்
நடிகர் சமுத்திரகனி தனது பிறந்தநாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகளை விமானத்தில் பெங்களூருவுக்கு சுற்றுலா செல்ல வழியனுப்பி வைக்கும் "வானில் ஒரு நாள் பயணம்" நிகழ்ச்சி சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி தனது பிறந்தநாளை குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சமுத்திரகனி, கேன்சர் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்திக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
Next Story
