வெப்சீரியலில் நடிக்க சமந்தா ஒப்பந்தம்?

திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா.
வெப்சீரியலில் நடிக்க சமந்தா ஒப்பந்தம்?
Published on

திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "ஓ பேபி" படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படத்தை அடுத்து 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான, "மன்மதடு 2" படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் அமேசான் பிரைம் சார்பில் தயாரிக்கப்பட உள்ள ஒரு வெப்சீரியலில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் ரசிகர்களுடன் நடத்திய ஒரு உரையாடலின்போது இதை உறுதிப்படுத்தியுள்ள சமந்தா, ஒப்பந்தம் கையெழுத்தானதும் தகவலை முழுமையாக வெளியிடுவேன் என்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com