சல்மான் கானை குலைநடுங்க விட்ட சம்பவம்.. வெளியான திடுக் தகவல்

நடிகர் சல்மான் கானின் மும்பையில் உள்ள பாந்த்ரா இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேரும், பன்வெல்லில் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஒரு வீடு வாடகைக்கு பார்த்து, முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். அந்த வீடு சல்மான் கானின் வீட்டில் இருந்து 10 கிமீ தொலைவில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பைக், கடந்த ஏப்ரல் 2ம் தேதி 24 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும், சாகர் பால் என்பவர் தான், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் கூறியுள்ளனர். சாகர் பால், ஹரியானாவில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து வந்ததும், இவர்களுக்கு மும்பையில் யாரிடமிருந்து துப்பாக்கி கிடைத்தது என விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com