15,000 கோடி சொத்து வந்தது எப்படி? யாரும் அறியா சைஃப் அலிகான் ரத்த வரலாறு

x
  • 15,000 கோடி சொத்து வந்தது எப்படி?
  • யாரும் அறிய சைஃப் அலிகான் ரத்த வரலாறு
  • சொத்துக்கு உரிமை கோரிய மத்திய அரசு
  • 15,000 கோடி ரூபாய் குடும்ப சொத்துக்களை இழக்கும் சூழலுக்கு நடிகர் சைஃப் அலிகான் குடும்பம் தள்ளப்பட்டிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
  • கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்து வீடு திரும்பிய சைஃப் அலிகான், 15 ஆயிரம் கோடி ரூபாய் குடும்ப சொத்துக்களை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
  • பாலிவுட் நடிகராகவே பெரும்பாலும் அறியப்படும் சைஃப் அலிகான், போபால் நவாப் குடும்ப வாரிசு..
  • போபாலின் கடைசி நவாப் ஹமிதுல்லா கான் இறப்புக்கு பிறகு, அவரது மூத்த மகள் அபிதா சுல்தான் சொத்துக்களுக்கு வாரிசாக அறிவிக்கப்பட்டார்.
  • ஆனால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது அபிதா சுல்தான் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார்.
  • அப்போது இந்தியாவில் இருந்த அவரது சகோதரி சஜிதா சுல்தான் சொத்துகளுக்கு வாரிசாக அறிவிக்கப்பட்டார்.
  • சஜிதா சுல்தான் மகன்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான், அவருக்கும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூருக்கும் பிறந்தவர் சைஃப் அலிகான்...
  • அவர்களது பட்டோடி குடும்பத்திற்கு போபால் அரண்மனை, நிலம், காடுகள் என 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
  • போபால் அரண்மனையில் வளர்ந்த சைஃப் அலிகான், பாலிவுட் நடிகரான பிறகு அவ்வப்போது அங்கு சென்று வந்தார்.
  • இந்த சூழலில் போபாலில் உள்ள நவாப் சொத்துகள் மீது வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என்றது மத்திய அரசு. எதிரி சொத்து சட்டத்தின் கீழ், சொத்துக்கு உரிமை கோரியது. இந்த சட்டப்படி 1947 பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்ற தனிநபர்கள் சொத்துக்களை மத்திய அரசு உரிமை கோர முடியும். விவகாரம் நீதிமன்றம் சென்றது.
  • சொத்துக்களை மத்திய அரசு எடுப்பதற்கு போட்டிருந்த தடையை 2024 டிசம்பரில் நீக்கியது போபால் உயர்நீதிமன்றம்... இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என சைஃப் அலிகான் குடும்பத்தை அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் தரப்பில் எந்தஒரு நகர்வும் எடுக்கப்படாததாக தகவல்கள் வெளியாகும் வேளையில், 15 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்