கோடையில் சச்சின் ரீ-ரிலீஸ் - விஜய் ரசிகர்கள் ஹாப்பி

x

வரும் கோடையில சச்சின் படம் ரீ-ரிலீஸ் ஆகுறதா தயாரிப்பாளர் தாணு அறிவிச்சிருக்காரு...

விஜய் இப்ப உச்சநட்சத்திரமா மிளிர்ந்தாலும், இதற்கு அடித்தளம் சச்சின் போன்ற படங்கள்தான்...

2005ல ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்களோட இறங்குன சச்சின், இன்னைக்கும் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு favourite.

விஜய் - வடிவேலு காம்போ... ப்பா, இப்ப பார்த்தாலும் சிரிப்புதான்.

சச்சின் ஜெனிலியாவ மறக்க முடியுமா... அந்த காலக்கட்டத்துல தன்னை ஜெனியாவாவே நினைச்சு சுத்துன பொண்ணுங்க ஏராளம்..

விஜய் மேஜிக், காதல், நகைச்சுவை கிளாமர்னு கலக்குன சச்சின், ரீ-ரிலீஸ் ஆகப்போகுது.. போன வருஷம் கில்லி. இந்த வருசம் சச்சின்.. விஜய் ஃபேன்ஸ் ஹாப்பிதான்.


Next Story

மேலும் செய்திகள்