`சச்சின்' பட நடிகருக்கு கொலை மிரட்டல்

குடும்பத்தோடு அழித்துவிடுவோம் என தன்னை ஒரு கும்பல் மிரட்டுவதாக நடிகர் மோகன் ஷர்மா புகார் அளித்துள்ளார்.

சச்சின், சுயம்வரம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் நடித்த மோகன் ஷர்மாவை கடந்த 26ஆம் தேதி ஒரு கும்பல் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்தார். விசாரணையில், போயஸ் கார்டனில் இருந்த அவரது வீட்டை ராஜா ரமணன் என்பவருக்கு விற்ற போது, இடைத்தரகர்கள் சேகரன், அவரது மகன் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடாவடியாக வீட்டை அபகரித்ததோடு, போலீசில் புகார் அளித்ததற்காக ஆட்களை ஏவி கடுமையாக தாக்கியதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தனக்கு அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுப்பதாக மோகன் சர்மா கூறியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com