Court | Vishal | Lyca | "ரூ.10 கோடி." விஷால் வழக்கில் கோர்ட் முக்கிய உத்தரவு
Court | Vishal | Lyca | "ரூ.10 கோடி." விஷால் வழக்கில் கோர்ட் முக்கிய உத்தரவு பத்து கோடி ரூபாய் டெபாசிட் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் கால அவகாசம் வழங்கலாமா? என்பது குறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடைவிதித்து, 10 கோடி ரூபாயை மட்டும் டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டது. ஆனால், ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளதால், பணத்தை செலுத்த 6 வார கால அவகாசம் வேண்டும் என்று விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கால அவகாசம் வழங்குவது குறித்து பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
