ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ராக் - என்ன ஆச்சு?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல WWE வீரரும், நடிகருமான ROCK உடல் மெலிந்து புதிய லுக்கில் இருப்பது ஃபேன்ஸ்க்கு ஷாக்கை கொடுத்துள்ளது.
WWEவில் ரசிகர்களின் அபிமான வீரராக இருந்தபோதும், ஹாலிவுட்டில் நடிகராக கலக்கிய போதும், தனது உடல் அமைப்பாலேயே சர்வதேச அளவில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் ROCK
WWE RINGற்கு வந்து ஆறு மாதங்களை கடந்துவிட்ட சூழலில், The Smashing Machine படத்தின் புரமோசனில் பிஸியாக வலம் வருகிறார் ROCK..
ஆனால், அவரது சமீபத்திய லுக்தான் ஃபேன்ஸ்க்கு ஷாக் கொடுத்துள்ளது.
எப்போதும் திடகாத்திரமான, வலிமையான உடலமைப்பால் பல கோடி ரசிகர்களை வசீகரிக்கும் ராக், The Smashing Machine படத்திற்காக 28 கிலோ எடையை குறைத்து மெலிந்த உடலைமைப்போடு காணப்படும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் பிரபல எம்.எம்.ஏ வீரரான மார்க் கெர்ரின் வாழ்க்கையை தழுவி The Smashing Machine படம் உருவாக்கப்பட்டுள்ளது. விமர்சகர்களிடமும் படம் பாராட்டை பெற்று வருகிறது.
