சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி

சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி
Published on

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சூர்யா தனது 44-வது படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படத்தை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்கு முன்னதாக இந்த படத்தை முடிக்க, சூர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யாவும், ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்து 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com