ரித்திகா சிங் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் | Rithika Singh | Thanthi Cinema
இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே, வேட்டையன் படங்கள்ல சூப்பர் சூப்பர் கேரக்டர்ஸ்ல நடிச்சி ஃபேன்ஸை கவர்ந்தவங்க ரித்திகா சிங்.
கிக் பாக்சரான ரித்திகா, முதல் படத்துலேயே பாக்சரா நடிச்சி மிரள விட்டாங்க..
ஆனா, 3 மாசத்துக்கு முன்னாடி கதையே வேற. ஜனவரி 11ஆம் தேதி உடல் எடைய செக் பண்ணும்போது 72 கிலோ இருந்ததை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளானதாவும், கண்ணாடிய பார்க்கும்போதெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டதாவும் சொல்லியிருக்காங்க.
அப்புறம் தன்னோட LIFE STYLE-அ மாத்த முடிவு எடுத்து, கடுமையா உடற்பயிற்சி, டான்ஸ், பாக்சிங் பயிற்சினு செஞ்சி, உடல் எடையை குறைச்சதா பெருமையோட வீடியோவ ஷேர் பண்ணியிருக்காங்க...
குறிப்பா, தனக்கு சாப்பிடுறது ரொம்ப பிடிச்சதா இருந்தாலும், தீங்கு விளைவிக்குற உணவை தவிர்த்துட்டதாவும் பதிவு பண்ணியிருக்காங்க....
ரித்திகா TRANSFORMATION-அ பார்த்துட்டு அசோக் செல்வன் GREATநு கமென்ட் போட்ருக்காரு. ஃபேன்ஸும் ரித்திகாவோட உழைப்புக்கு FIRE விட்டுட்டு இருக்க, வீடியோ இன்ஸ்டால வைரலா போயிட்டு இருக்கு.
