லைட் இல்லாததால் அகல் விளக்கோட ஷூட் - 'ரெட்ரோ' காமிக்
ரெட்ரோ படக்குழு திருப்பி ஒரு காமிக்க போட்டு, ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்காங்க...
மே ஒன்னு படம் தியேட்டருக்கு வர, இப்பைல இருந்தே படக்குழு புரமோசன ஸ்டார்ட் பண்ணிடுச்சி..
ஏற்கனவே படத்தோட அறிமுக டீசர் எடுக்கப்பட்டது எப்படினு காமிக்ல சொன்ன படக்குழு, இப்ப, வாரணாசியில ஒரு காட்சியை எப்படி எடுத்தோம்னு கூறியிருக்காங்க..
திட்டமிட்ட ஷெட்யூல் முடியுற அன்னைக்கு, போதிய லைட் இல்லாம இருந்ததாகவும். நைட் 7 மணிக்குள்ள ஷூட்டிங்க முடிக்கனுமேனு யோசிச்சிட்டு இருந்தப்ப, ஒளிப்பதிவாளர் ஸ்ரேயஸ் ஐடியால, 200 அகல்விளக்கை ஏத்தி ஷூட் நடத்துனதா கூறியிருக்காங்க... அப்புறம் சூர்யா - பூஜா ஒரே டேக்ல ஓகே வாங்க, பிளான் சக்ஸஸ்னு படக்குழு காமிக்ல சொல்லியிருக்கு...
Next Story
