இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகை ரம்யா நம்பீசன் : பெண்கள் சந்திக்கும் துன்பம் குறித்து குறும்படம்

பெண்கள் சந்திக்கும் துன்பங்களை வெளிப்படுத்தும் குறும்படத்தை நடிகை ரம்யா நம்பீசன் இயக்கி, வெளியிட்டுள்ளார்.
இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகை ரம்யா நம்பீசன் : பெண்கள் சந்திக்கும் துன்பம் குறித்து குறும்படம்
Published on
பெண்கள் சந்திக்கும் துன்பங்களை வெளிப்படுத்தும் குறும்படத்தை நடிகை ரம்யா நம்பீசன் இயக்கி, வெளியிட்டுள்ளார். UNHIDE என்ற பெயரில் வெளியிட்டுள்ள தமிழ் குறும்படத்தை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், மலையாள நடிகை மஞ்சு வாரியர் போன்றோர் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரம்யாவே நடித்து வெளியிட்டுள்ள இக்குறும்படத்தில், பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள், துன்பங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. காமத்திற்கு இலக்கணம் வகுத்த இந்த தேசத்தில் நிமிடத்திற்கு ஒரு பலாத்காரமா என்ற கேள்வியை இக்குறும்படத்தின் மூலமாக ரம்யா நம்பீசன் முன் வைத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com