மறுபிறவி எடுத்த ரவிமோகனின் முதல் முயற்சிக்கே முட்டுக்கட்டை.../"ப்ரோ கோட்" படத்தின் தலைப்பை பயன்படுத்த கூடாதென மின்னஞ்சல்...

x

நடிகர் ஜெயம் ரவி அவருடைய பெயரை ரவிமோகனாக பிரகடனப்படுத்தி கொண்ட பிறகு அதே பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி ஒட்டுமொத்த இன்டஸ்ட்ரீயையும் ஆச்சரியபடுத்தினார்அந்த நிறுவனம் குறித்த அறிமுக வீடியோ பதிவில் தன்னுடைய ஸ்டூடியோ புதுமுக இயக்குனர்கள், அறிமுக கதாநாயகர்கள், திறமையான டெக்னீஸினஸ் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

அதோடு, பிரபல OTT தளங்களுடனும் பல Projects-க்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு வருடத்திற்குள் 10 திரைப்படங்களை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்து பெரியளவில் Hype உருவாக்கினார்.

தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகளால் கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளிலும், சொத்துக்கள் முடக்கம் போன்ற சட்ட பஞ்சாயத்திலும் சுழன்று கொண்டிருந்த ரவிமோகனின் இந்த புதிய அவதாரம் அவருக்கான ஒரு பாசிடீவ் Comeback ஆக இருக்குமென திரையுலகினர் நம்பினர்


Next Story

மேலும் செய்திகள்