Ravi Mohan தன் வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள ரவி மோகனுக்கு சாதகமாக வந்த ஐகோர்ட் தீர்ப்பு
ரவி மோகன் படத்திற்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்தி கொள்ளலாம்-நீதிமன்றம் நடிகர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்திற்கு ப்ரோ கோட் (Bro Code) என்ற பெயரை பயன்படுத்திகொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியான நிலையில் டெல்லியை சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து ரவி மோகன் தரப்பு வழக்கு தொடர்ந்த நிலையில் சினிமா தயாரிப்பை பொருத்தவரை, இந்த பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதாக தெரிவித்தது. இதை ஏற்றுகொண்ட நீதிபதி இந்த பெயரை படத்திற்கு பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என மதுபான நிறுவனத்துக்கு மூன்று வார கால இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
Next Story
