Deep Fake வீடியோ விவகாரம்.. மனம் திறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா

Deep Fake வீடியோ விவகாரம்.. மனம் திறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா
Published on

கீதா கோவிந்தம், புஷ்பா, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் டீஃப் ஃபேக் வீடியோ சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, நடிகையாக இருப்பதால் தனக்கு ஆதரவு கிடைத்ததாகவும், டீப் ஃபேக் தொழில்நுட்பததால் பாதிக்கப்படும் பெண்களின் நிலையை நினைத்தால் அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டீப் ஃபேக் தொழில்நுட்பம் குறித்து பொதுவெளியில் பேசினால் விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காகவே, இதுகுறித்து பேசியதாகவும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com