Rashmika Mandanna | விரைவில் ராஷ்மிகாவுக்கு டும். டும்.. டும்..

பிரபல நடிகர்கள் விஜய் தேவரக்கொன்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.2011ஆண்டு தெலுங்கில் வெளியான நூவிலா திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய் தேவரக்கொண்டா 2017ஆம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் ஒரு ரக்கட் பாயாக நடித்து உலகளவில் ஃபேமஸ் நடிகரானார். பின்னர், 2018 வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் காதலியான நடிகை ராஷ்மிகாவுக்கு பயந்த ஒரு காதலனாக கலக்கி இருப்பார் நடிகர் விஜய் தேவரக்கொண்டா பின்னர், 2019ஆம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடித்தபொழுது காதலில் விழுந்ததாக விஜய் மற்றும் ராஷ்மிகா பற்றி கிசுகிசுக்கள் வெளியாயின. இதனை பற்றி பெரிதும் பேசாத இருவரும், தங்களது இன்ஸ்டா போஸ்ட்கள் மூலமாக ரசிகர்களுக்கு அவ்வப்பொழுது க்ளூ கொடுத்து வந்தனர். இந்நிலையில், தற்பொழுது ஹைதராபாதில் உள்ள விஜய் தேவரக்கொண்டா இல்லத்தில் வைத்து இருவரும் நிச்சயர்த்தம் செய்துகொண்டதாக தவவல் வெளியாகியுள்ளன. இதற்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொள்வர் என தகவல் கசிந்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com