ஏ.ஐ மூலம் ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ -அமிதாப் பச்சன் கண்டனம்

ஏ.ஐ மூலம் ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ -அமிதாப் பச்சன் கண்டனம்
Published on

இணையத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ பகிரப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஜாரா படேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமாக வீடியோவை பதிவிட்டு வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அவரது முகத்திற்கு பதிலாக நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை மாற்றி இணையத்தில் பகிரப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாலிவுட் உச்சநட்சத்திரம் அமிதாப் பச்சன், இதுபோன்ற செயல்களை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தனக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக அமிதாப் பச்சனுக்கு ராஷ்மிகா நன்றி தெரிவித்தார். 

X

Thanthi TV
www.thanthitv.com