Ranveer Singh | Kantara | மவுனம் கலைத்து மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மேடையில் காந்தாரா காட்சியை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கேலி செய்யும் வகையில் நடித்துக் காண்பித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அந்த செயலுக்கு ரன்வீர் சிங் மன்னிப்பு கோரியுள்ளார்...
காந்தாராவில் வரக்கூடிய ஆக்ரோஷமான முகபாவத்தை ரன்வீர் சிங் கேலியாக நடித்து காண்பித்ததாக இணையத்தில் வீடியோ வைரலானது...
இந்த செயல் கன்னடர்களின் தெய்வத்தை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக கூறி ரன்வீர் சிங் மன்னிப்பு கோர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்த நிலையில்
ரன்வீர் சிங் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை பாராட்டுவதற்காகவே அப்படி செய்ததாகவும், ஒரு நடிகனாக அந்த மாதிரியான ஒரு காட்சியில் நடிப்பது எவ்வளவு சவாலானது என்பது தனக்கு தெரியும் என்றும்,
தான் எப்போதும் எல்லா கலாச்சாரங்களையும் நம்பிக்கைகள் மீதும் பெரும் மரியாதை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்..
மேலும், தன்னுடைய செயலால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
