"நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்".. நீதிமன்ற வாசலில் சபதம் எடுத்த கவுதமி

காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் தனக்கு ராமநாதபுரத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாகவும், ஏமாற்றிய பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கூறி கௌதமி தொடர்ந்த வழக்கில் அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியார் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது என கௌதமி நீதிமன்றத்தில் முறையிட வந்தார்... அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வழக்கில் இறுதிவரை போராடுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com