Rajinikanth | Sundar C | ரஜினி படத்தில் இருந்து விலக இதான் காரணமா? - சுந்தர் சி. சொன்ன பதில்
சென்னையின் தியாகராய நகரில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, பிக் பாஸ் 4பிரபலங்களான வினுஷா தேவி, சபரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் சுந்தர்.சி, தனக்கு மிகவும் பிடித்த நடிகர் கார்த்திக் என்றும், அதே போல் நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைல் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் அவரது மனைவியான நடிகை குஷ்பு அவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உடன் செல்வீர்களா என்ற கேள்விக்கு, மனைவிக்கான முக்கியமான தருணத்தில் சென்று தான் ஆக வேண்டும் என பதிலளித்தார். உங்கள் கனவு படமான சங்கமித்ராவை இயக்கவே, தலைவர் 173 படத்தில் இருந்து விலக காரணமா? என்ற கேள்விக்கு, அதற்கும் விலகலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தினார். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து, தற்போது கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
