"Asha Forever " இசை அஞ்சலி காணொளியில் இணைந்த ரஜினிகாந்த்
"Asha Forever " இசை அஞ்சலி காணொளியில் இணைந்த ரஜினிகாந்த்
ஆஷா போஸ்லேவின் மறைவைத் தொடர்ந்து, அவரது திரைப்பங்களிப்பு மற்றும் இசைப் போற்றும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை அஞ்சலி காணொளி ஒன்றை உருவாக்கி வருகிறார்.
‘ஆஷா ஃபாரெவர்' (Asha Forever) என்ற தலைப்பில் உருவாகும் இந்தக் காணொளியில், ஷாருக்கான், கமல்ஹாசன், சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
அந்த வரிசையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தும் இந்த டிரிபியூட் மியூசிக் காணொளியில் இணைந்துள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில், ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான், லட்சக்கணக்கானோரால் நேசிக்கப்படும் ஒரு ஜாம்பவான், மற்றொரு ஜாம்பவானை கௌரவிப்பது சிறப்பான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.
